நடிகர் வாகை சந்திரசேகருக்கு சங்கீத நாடக அகாடமி விருது வழங்கிய ஜனாதிபதி

300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ் திரையுலகின் முக்கிய குணச்சித்திர நடிகர்களில் ஒருவராக வாகை சந்திரசேகர் வலம்வருகிறார்.
நடிகர் வாகை சந்திரசேகருக்கு சங்கீத நாடக அகாடமி விருது வழங்கிய ஜனாதிபதி
Published on

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான சங்கீத புரஸ்கர் விருது மற்றும் அகாடமி விருதுகளை 115 கலைஞர்களுக்கு, டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று வழங்கி சிறப்பித்தார்.

வாகை சந்திரசேகர் தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். தனது எதார்த்தமான நடிப்பிற்காக அறியப்படும் இவர், 'நண்பா நண்பா' திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். தீவிர அரசியலிலும் ஈடுபட்டு, திமுக சார்பில் வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் குணச்சித்திர நடிகரான வாகை சந்திரசேகர், 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி "யுவ புரோஸ்கர்" தேசிய விருது நடிகர் வாகை சந்திரசேகருக்கு அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சங்கீத நாடக அகாடமி விருது (Sangeet Natak Akademi Puraskar) இந்தியாவின் இசை, நடனம், நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய தேசிய விருதாகும். இசை, நடனம், நாடகம், பாரம்பரிய /நாட்டுப்புறக் கலைகள் மற்றும் பொம்மலாட்டம் கலைகளுக்கான ஒட்டுமொத்த பங்களிப்பு அல்லது ஆராய்ச்சி என 5 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இசை, நாடகம், நடனம் பாரம்பரிய கலைகளில் பங்களிப்பிற்கு வழங்கப்படும் யுவ புரோஸ்கர் விருது ஆகும்.

வாகை சந்திரசேகர்

1980களில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தனது யதார்த்தமான மற்றும் தனித்துவமான நடிப்புத் திறமையால், குணச்சித்திர கதாபாத்திரங்கள் முதல் வில்லன்கள் வரை பலதரப்பட்ட வேடங்களில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, ஒரு அழியாத முத்திரையைப் பதித்தார்.

கலைத்துறைக்கு இவர் ஆற்றிய சிறந்த சேவையைப் பாராட்டி, 1991ம் ஆண்டு தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது. 2002 ஆம் ஆண்டு வெளியான 'நண்பா நண்பா' திரைப்படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.

அரசியல்

கலைத்துறை மட்டுமல்லாமல் அரசியலில் கால்பதித்தார் வாகை சந்திரசேகர். திமுக சார்பில் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் திறம்படப் பணியாற்றினார். தற்போது தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

வாகை சந்திரசேகருக்கு சங்கீத நாடக அகாடமி விருது

தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகர் வாகை சந்திரசேகருக்கு சங்கீத நாடக அகாடமியின் புரஸ்கார் விருதை டெல்லி விக்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கி கவுரவித்தார். நாடகம் மற்றும் கலைத்துறைக்கு இவர் ஆற்றிய ஒட்டுமொத்த பங்களிப்பைப் பாராட்டி இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

விருது பெற்ற பின் பேசிய வாகை சந்திரசேகர், இந்த விருதை தமிழ்நாட்டில் வாழும் அனைத்து நாடகக் கலைஞர்களுக்கும் சமர்ப்பிப்பதாக நெகிழ்ச்சியுடன் கூறினார். விருது பெற்ற உடனேயே தி.மு.க தலைவர் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததாக நடிகர் வாகை சந்திரசேகர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com