நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் நடிகர் விஜய்

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது.
நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் நடிகர் விஜய்
Published on

திருநெல்வேலி, 

தமிழகம் வரலாறு காணாத மழைப்பொழிவை இந்த மாதம் சந்தித்தது. முதலில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், பின்னர் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களிலும் அதி கனமழை பெய்தது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

இதில் வீடுகள், சாலைகள், பல்வேறு கட்டமைப்புகள் என அதிக அளவிலான சேதங்கள் ஏற்பட்டன. மேலும் ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் இறந்தன. இதனையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண தொகையை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், திருநெல்வேலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல திட்ட உதவிகளை நடிகர் விஜய் வழங்கவுள்ளார். அதன்படி, திருநெல்வேலியில் உள்ள கே.டி.சி நகரில் காலை 11 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று நல திட்ட உதவிகளை வழங்குகிறார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com