'தளபதி 68' படத்தின் படப்பிடிப்புக்காக தாய்லாந்து புறப்பட்டார் நடிகர் விஜய்!

'லியோ' படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தன்னுடைய 68-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
'தளபதி 68' படத்தின் படப்பிடிப்புக்காக தாய்லாந்து புறப்பட்டார் நடிகர் விஜய்!
Published on

சென்னை,

'லியோ' திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். 'தளபதி 68' என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

விஜயதசமி நாளில் படத்தின் பூஜை நடத்தப்பட்டது. இந்த வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டது.

இந்த படத்தில் பிரபு தேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, மோகன், யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் பாடலாசிரியராக மதன் கார்க்கி இணைந்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெறுகிறது. இதனையடுத்து தளபதி 68 படக்குழு கடந்த 31ஆம் தேதி அன்று தாய்லாந்து நாட்டிற்கு புறப்பட்டு சென்றது.

லியோ படத்தின் வெற்றி விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற காரணத்தால் படப்பிடிப்பிற்காக விஜய் தாய்லாந்து செல்லவில்லை படக்குழு மட்டும் அங்கு சென்றது. வெற்றி விழா நிறைவடைந்ததை அடுத்து இன்று காலை 'தளபதி 68' படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து புறப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com