மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி..!

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி..!
Published on

காண்டீவரா,

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் இந்திய திரைபிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

புனித் ராஜ்குமாரின் உடல் காண்டீவராவில் உள்ள அவரது தந்தை சமாதிக்கு அருகில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நடிகர்கள் விஜய் சேதுபதி, விஷால், உதயநிதி ஸ்டாலின், கமல், பிரபு, சிவகார்த்திகேயன், சூர்யா உள்ளிட்ட பலர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் புனித் ராஜ்குமார் நினைவிடத்திற்கு இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com