கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ. 25 லட்சம் நிதி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விஜய் சேதுபதி 25லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நடிகர் விஜய் சேதுபதி ரூ. 25 லட்சம் நிதி
Published on

சென்னை

கொரோனா பேரிடரை எதிர்கொள்ள தாராளமாக நிதி வழங்கிட வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கையை ஏற்று தனிநபர், தொழில் நிறுவனங்கள் மற்றும் திரையுலகினர் என ஏராளமானோர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விஜய் சேதுபதியும் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 25லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சரை சந்தித்த விஜய் சேதுபதி நிவாரண நிதியை வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com