நடிகர் விஜய்க்கு பிறந்த நாள்...! பிரபலங்கள் வாழ்த்து...!

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜய்க்கு பிறந்த நாள்...! பிரபலங்கள் வாழ்த்து...!
Published on

சென்னை

முன்னணி நடிகரான விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைபிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ரத்ததான முகாம்கள், இலவச உணவு என பல முன்னெடுப்புகளை செய்து வருகின்றனர். மேலும் போஸ்டர்கள் ஒட்டி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விஜய்யின் உறவினருமான விக்ராந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்து விஜய்யின் சிறு வயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தாம்பரம் பகுதியில் பல்வேறு இடத்தில் விஜய் பிறந்தநாளையொட்டி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது இதில் ''பல கோடி இளைஞர்களின் நம்பிக்கையே தமிழகத்தை ஆள்வது இரண்டு கட்சிகள் தான் என்ற வரலாற்றை மாற்றி எழுத வா தளபதியே'' என்று அவரை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு அழைக்கும் பாணியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகரும், விஜய்யின் உறவினருமான விக்ராந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்து விஜய்யின் சிறு வயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகை ராதிகா சரத்குமார் விஜய் உடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் போட்டோவை பதிவிட்டு வாழ்த்தி உள்ளார்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ஹேப்பி பர்த்டே விஜய் அண்ணா என வாழ்த்தி உள்ளார்.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் அர்ஜுன் தாஸ் மாஸ்டர் படப்பிடிப்பின் போது எடுத்த ஸ்டில்லை பகிர்ந்து வாழ்த்தி உள்ளார்.

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் வாரிசு படத்தின் ஷூட்டிங்கின் போது எடுத்த ரேர் பிக்கை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சரத்குமார் வாரிசு படத்தின் ஸ்டில்லை வெளியிட்டு நடிகர் விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் விஜய் என இவர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

பிகில் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கர் வெளியிட்ட பிக்ஸ். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com