பூஜையுடன் தொடங்கியது நடிகர் விமலின் புதிய படம்

இயக்குனர் மனீஷ் கே தோப்பில் இயக்கத்தில் நடிகர் விமல் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
பூஜையுடன் தொடங்கியது நடிகர் விமலின் புதிய படம்
Published on

சென்னை,

நடிகர் விமல் பசங்க படத்தின் மூலம் அறிமுகமாகி 'களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு' போன்ற வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவரது நடிப்பில் சமீபத்தில் 'பரமசிவன் பாத்திமா' படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து நடிகர் விமல் 'தேசிங்குராஜா 2' நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் நடிகர் விமலின் அடுத்த படத்திற்கான பணி தொடங்கி உள்ளது. அதற்கு முதற்கட்ட படப்பிடிப்பை பணியை இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளனர். இந்த படத்தினை அஜித் விநாயகா பிலிம்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தினை இயக்குனர் மனீஷ் கே தோப்பில் இயக்க உள்ளார். இவர் ப்ளட்லைன் மற்றும் சன் ஆப் கேங்ஸ்டர் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com