

ஜோயல் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கூடு’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஷால் இன்று வெளியிட்டுள்ளார்.
புதுமுக நடிகர்கள் நடிக்கும் ‘கூடு’ படத்தின் டைட்டில் லுக் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.
உண்மைச் சம்பவத்தை தழுவி தயாராகும் இந்தத் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஜோயல் விஜய் இயக்குகிறார்.
இப்படத்தை ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் ஏ என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் கணேஷ் மற்றும் கண்ணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பர்ஸ்ட் லுக்கில் நட்சத்திரங்களின் முகங்கள் எதுவுமின்றி ‘கூடு’ என்ற டைட்டில் மட்டும் வித்தியாசமாக இடம்பெற்றிருப்பதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.