"சிக்ஸ் பேக்" விவகாரம்... சிவக்குமார் பேச்சுக்கு நடிகர் விஷால் பதிலடி


சிக்ஸ் பேக் விவகாரம்... சிவக்குமார் பேச்சுக்கு நடிகர் விஷால் பதிலடி
x
தினத்தந்தி 24 April 2025 7:30 PM IST (Updated: 24 April 2025 7:33 PM IST)
t-max-icont-min-icon

சூர்யாவுக்கு முன்பாகவே நடிகர் தனுஷ் சிக்ஸ் பேக் வைத்ததாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்துள்ளார். காதல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் அப்பாவும் நடிகருமான சிவக்குமார் பேசியது சர்ச்சையானது. அந்த நிகழ்வில் சிவக்குமார், "என் பையன் சூர்யாவுக்கு முன்னாடி தமிழ்நாட்டில் சிக்ஸ் பேக் வைத்த நடிகர் யாராவது இருக்காங்களா?" எனப் பெருமையாகப் பேசினார். இதனால், சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே சிக்ஸ் பேக் தொடர்பான விவாதம் எழுந்தது.

இந்தப் பிரச்னையில் நடிகர் விஷால் ரசிகர்கள் சத்யம் படத்திலேயே சிக்ஸ் பேக் வைத்துவிட்டார் எனக் கூறினார்கள். இது குறித்த கேள்விக்கு விஷால், "முதல்முறையாக தனுஷ்தான் பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்தார். பிறகு நான் சத்யம், மதகஜராஜா படங்களுக்காக சிக்ஸ் பேக் வைத்தேன். மக்கள் மறந்து விட்டார்கள் என நினைக்கிறேன்" என்றார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் 2007ம் ஆண்டு வெளியானது. சூர்யா நடித்த 'வாரணம் ஆயிரம்' 2008 நவம்பரிலும், விஷாலின் சத்யம் 2008 ஆகஸ்டிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story