நடிகர் விஷாலின் அடுத்த படங்கள்

தான் நடிக்க உள்ள அடுத்த படங்கள் குறித்து விஷால் பேசினார்.
நடிகர் விஷாலின் அடுத்த படங்கள்
Published on

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். செல்லமே திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆன இவர் சண்டக்கோழி, தாமிரபரணி என பல அதிரடி ஹிட் படங்களை கொடுத்து டாப் நடிகளில் ஒருவராக உள்ளார். நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

இவரது நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு உருவான படம் 'மதகஜராஜா'. இதில் சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.

சுமார் 12 ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்த இப்படம், கடந்த 12-ந் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. அதில், தான் நடிக்க உள்ள அடுத்த படங்கள் குறித்து விஷால் பேசினார். அவர் கூறுகையில்,

"கவுதம் வாசுதேவ் மேனன் உடன் எனது அடுத்த படம் உருவாகிறது. அடுத்ததாக துப்பறிவாளன் 2 , அதற்கடுத்ததாக அஜய் ஞானமுத்து உடன் ஒரு படமும் நடிக்கவுள்ளேன்" என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com