நடிகர் விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டா விரைவில் திருமணம்

தமிழ் திரைப்பட நடிகர் விஷ்ணு விஷால், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்து கொள்ளும் அறிவிப்பினை வெளியிட்டார்.
நடிகர் விஷ்ணு விஷால், ஜுவாலா கட்டா விரைவில் திருமணம்
Published on

சென்னை,

தமிழில் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகனாக நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் நடிகர் விஷ்ணு விஷால். இவருக்கு திருமணம் முடிந்து விவாகரத்து பெற்ற நிலையில், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர் என ஊடகங்களில் செய்தி வெளிவந்தன. எனினும் இதனை விஷ்ணு விஷால் நீண்டகாலங்களாக உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில், வருகிற 22ந்தேதி இருவரும் பதிவு திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். இதுபற்றி நடிகர் விஷ்ணு விஷால் தனது டுவிட்டரில், திருமண தேதி பற்றிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார். இதில், அவர்களது நெருங்கிய சொந்தங்கள் கலந்து கொள்கின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com