தனது முதல் முத்தம் பற்றி பேசிய நடிகர் வி.டி.வி.கணேஷ்


தனது முதல் முத்தம் பற்றி பேசிய நடிகர் வி.டி.வி.கணேஷ்
x
தினத்தந்தி 17 Sept 2025 7:20 PM IST (Updated: 17 Sept 2025 7:21 PM IST)
t-max-icont-min-icon

கிஸ் பட விழாவில் பங்கேற்ற வி.டி.வி.கணேஷ் தனது முதல் முத்தம் பற்றி பேசினார்.

சென்னை,

சதீஷ் இயக்கத்தில் கவின் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘கிஸ்’. படத்தின் கதாநாயகியாக பிரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். ஜென்மார்ட்டின் இசை அமைத்துள்ளார். இந்த படம் வருகிற 19-ந்தேதி திரைக்கு வருகிறது.

இதைத் தொடர்ந்து படத்தின் புரொமோஷன் விழா சென்னையில் நேற்று மாலை நடந்தது. விழாவில் பங்கேற்ற வி.டி.வி.கணேஷ் தனது முதல் முத்தம் பற்றி கூறுகையில், என்னுடைய 21 வயதில் குடிக்க வேண்டும் என்றால் நானும் நண்பனும் மகாபலிபுரம் கடற்கரைக்கு சென்று விடுவோம். அப்போது ஒரு முறை சென்றிருந்த போது அங்கு 2 பிரெஞ்சு பெண்கள் கடலில் குளிக்க போகும் போது அவர்களின் துணிகளை பார்த்து கொள்ளும்படி சொல்லி சென்றார்கள். அவர்களை பார்த்ததும் பிரெஞ்சு முத்தம் நினைவுக்கு வந்தது.

நான் அந்த பெண்ணிடம் சென்று எனக்கு கிஸ் பண்ண சொல்லி கொடுக்க சொன்னேன். அதற்கு அவர்களுடன் கடலில் குளித்தால் முத்தம் தருவதாக சொன்னார்கள். நானும் அவர்களுடன் கடலுக்கு சென்றேன். கழுத்து வரை கடல் தண்ணீரில் சென்ற எனக்கு நீச்சலும் தெரியாது. மீண்டும் அவர்களிடம் யே முத்தம் கொடுத்தால் கொடு. இல்லையென்றால் நான் திரும்பி போகிறேன் என நான் சொல்ல, 2 பெண்களில் ஒருவர் எனக்கு முத்தம் கொடுத்தாள். நான் அப்படியே மயங்கி விட்டேன். பின்னர் என்னை இழுத்து வந்து கரையில் போட்டார்கள். இவ்வாறு பேசி விழாவை கலகலப்பாக்கினார் வி.டி.வி.கணேஷ்.

1 More update

Next Story