தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் நடிகர் யோகி பாபு

நடிகர் யோகி பாபு தெலுங்கு திரைப்படத் துறையில் முதன்முறையாக ‘குர்ரம் பாப்பி ரெட்டி’ படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.
தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் நடிகர் யோகி பாபு
Published on

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகி பாபு. ரஜினி, அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டுமில்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடித்து வெளியான மண்டேலா திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்றது. 

இந்நிலையில், இயக்குநர் முரளி மனோஹர் ரெட்டி மற்றும் நடிகர் பிரம்மானந்தம் கூட்டணியில், குர்ராம் பாப்பி ரெட்டி எனும் புதிய திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தை முரளி மனோகர் ரெட்டி இயக்குகிறார்.இந்தத் திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதன்மூலம், நடிகர் யோகி பாபு தெலுங்கு திரையுலகில் அறிமுகமாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் உருவாகி வரும் இந்தப் படத்தில், தற்போது யோகி பாபுவும் இணைந்துள்ளது தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. சமீபத்தில், நடிகர் பிரம்மானந்தததின் அழைப்பின் பேரில் யோகி பாபு அவரது வீட்டுக்குச் சென்றிருந்தார். நீண்ட நேர உரையாடல்களுக்கு பின், யோகி பாபுவுக்கு, நான் பிரம்மானந்தம் எனும் தனது புத்தகத்தை அவர் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com