சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்


சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்
x

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார்.

ராணிபேட்டை,

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் யோக லட்சுமி நரசிம்மர் கோவிலில் கார்த்திகை பெருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகர் யோகி பாபு பெரிய மலைக்கு ரோப்காரில் சென்று யோகநரசிம்மரை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பில் பட்டு வஸ்திரம், மலர் மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் கோவில் பணியாளர்கள், ரசிகர்கள் நடிகர் யோகிபாபுவுடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து கொண்டனர். அப்போது அவர்களுக்கு சிரித்தபடி யோகிபாபு போஸ் கொடுத்தார்.

1 More update

Next Story