நடிகர்கள் தர்மேந்திரா, மம்முட்டி மற்றும் மாதவனுக்கு பத்ம விருதுகள்

மறைந்த நடிகர் தர்மேந்திர சிங் தியோலுக்கு ‘பத்ம விபூஷண்’ விருதும், மாதவனுக்கு ‘பத்ம ஸ்ரீ’ விருதும், மம்முட்டிக்கு ‘பத்ம பூஷண்’ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 77வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ என மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகின்றன.
கலை, இலக்கியம், சமூக சேவை, மருத்துவம், கல்வி, பொது சேவை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும், பொதுவாழ்க்கையில் நீண்டகாலம் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் மறைந்த நடிகர் தர்மேந்திரா மற்றும் நடிகர் மம்முட்டி, நடிகர் மாதவன் ஆகியோருக்கு 2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த நடிகர் தர்மேந்திர சிங் தியோலுக்கு ‘பத்ம விபூஷண்’ விருதும், நடிகர் மாதவனுக்கு ‘பத்ம ஸ்ரீ’ விருதும், நடிகர் மம்முட்டிக்கு ‘பத்ம பூஷண்’ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.






