நடிகர்கள் போதை பொருள் பயன்படுத்துவது தவறான விஷயம் - நடிகை அம்பிகா கருத்து


நடிகர்கள் போதை பொருள் பயன்படுத்துவது தவறான விஷயம் - நடிகை அம்பிகா கருத்து
x

எனக்கு அரசியலுக்கு வரலாம் என்ற எண்ணம் உள்ளது என்று நடிகை அம்பிகா கூறியுள்ளார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நடிகை அம்பிகா சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அவர் சம்பந்த விநாயகரை வழிபட்டு பின்னர் அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன் சன்னதிகளில் வழிபாடு செய்தார்.தொடர்ந்து அவருக்கு சிவாச்சாரியார்கள் கோவில் சார்பில் பிரசாதம் வழங்கினர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த ஒருவாரமாக அருணாசலேஸ்வரர் கோவிலின் பெயரும், படமும் அடிக்கடி தென்பட்டு வந்ததால் தற்போது அருணாசலேஸ்வரரை தரிசிக்க வந்து உள்ளேன். சாமியை வழிபாடு செய்தது மனதிற்கு நிறைவாக உள்ளது.

எனக்கு அரசியலுக்கு வரலாம் என்ற எண்ணம் உள்ளது. அரசியல் மூலமாக ஏதாவது 2 விஷயம் அல்லது 2 நபர்களுக்கு நல்லது செய்ய முடிந்தால் பெருமையாக நினைப்பேன். கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். எனக்கு மூட நம்பிக்கைகள் கிடையாது. கடவுள் நம்பிக்கை உண்டு. தலைவிதிப்படி எது நடக்குமோ அது நல்லதாகவே நடக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் நடிகர்கள் போதை பொருள் வழக்கில் சிக்கி உள்ளார்களே என்ற கேள்விக்கு, போதை பொருள் உயிரை கெடுக்கும். நடிகர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதை பார்த்து மற்றவர்கள் அதனை பயன்படுத்துவார்கள். அதனால் நடிகர்கள் போதை பொருள் பயன்படுத்துவது மிகவும் தவறான விஷயம் என்றார்.

1 More update

Next Story