'நான் எந்த பிரச்சினையிலும் இல்லை'... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஆத்மிகா

’மீசைய முறுக்கு’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஆத்மிகா.
ஆத்மிகா
Published on

சென்னை,

பிரபல நடிகை ஆத்மிகா, சமூக வலைதளங்களில் பகிரும் தனது பதிவுகள் குறித்தும் இன்ஸ்டாகிராமில் மனம் திறந்துள்ளார்.

தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்

இதுகுறித்து ஆத்மிகா வெளியிட்டுள்ள பதிவில், "எனது அனுபவங்களில் இருந்து தோன்றும் எண்ணங்களையே நான் அடிக்கடி பகிர்கிறேன். இதை பார்த்து நான் எப்போதும் ஏதோ ஒரு பிரச்சினையில் இருப்பதாக சிலர் நினைத்து கொள்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. யாருக்காவது பயனுள்ளதாக இருக்கும் என்பதற்காகவே அவற்றை பதிவிடுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

தைரியம் வேண்டும்

மேலும், "நாம் விரும்பும் வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வாழ்வது எப்போதும் எளிதானது அல்ல. அதற்கு மிகுந்த தைரியம் தேவை" என்று ஆத்மிகா தெரிவித்துள்ளார். ஆத்மிகாவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆத்மிகா

ஹிப் ஹாப் ஆதி இயக்கி நடித்த ’மீசைய முறுக்கு’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஆத்மிகா. தொடர்ந்து ’கோடியில் ஒருவன்’ படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தார். காட்டேரி, நரகாசுரன் ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com