4 திருமணம் பற்றி நடிகையிடம் கேள்வி... குறுக்கே புகுந்து ரசிகர் அளித்த பதிலால் கலகலப்பான நேரலை

அட கடவுளே! என்னுடைய வாழ்க்கையில் நான் கேட்டதிலே அதிக நகைச்சுவையான விசயம் இது என நடிகை ஜெனிபர் கூறினார்.
4 திருமணம் பற்றி நடிகையிடம் கேள்வி... குறுக்கே புகுந்து ரசிகர் அளித்த பதிலால் கலகலப்பான நேரலை
Published on: 

நியூயார்க்

பிரபல அமெரிக்க நடிகை, பாடகி என பன்முக திறமை பெற்றவர் ஜெனிபர் லோபஸ். அவரிடம் மற்றொரு நடிகை ரேச்சல் ஜெக்ளர் பேட்டி கண்டார். நியூயார்க்கில் நடந்த நேரலை நிகழ்ச்சியான இதில், ஜெனிபரின் 4-வது திருமணம் பற்றிய பேச்சு எழுந்தது.

அதற்கு அவர் பதிலளிக்க முற்பட்டார். அப்போது பார்வையாளர்கள் வரிசையில் இருந்த அவருடைய தீவிர ரசிகர் ஒருவர் குறுக்கே புகுந்து, உங்களுக்கு இன்னும் கூடுதலாக 6 விரல்கள் உள்ளன என்றார்.

நகைச்சுவையான விசயம்

இதனை கேட்டதும் ஜெனிபரும், ஜெக்ளரும் சிரித்து விட்டனர். உடனே ஜெனிபர் அதற்கு பதிலாக, ஆம். அது சரிதான் என கூறி விட்டு, அட கடவுளே! என்னுடைய வாழ்க்கையில் நான் கேட்டதிலே அதிக நகைச்சுவையான விசயம் இது என கூறினார்.

இதன் பின்னர், இந்த வாசகம் டி-சர்ட்டில் பதிக்கப்பட வேண்டும் என்று நகைச்சுவையாக கூறினார். எனினும், என்னிடம் அது இருக்கின்றதா? என எனக்கே தெரியவில்லை என்றும் வருத்தத்துடன் கூறினார்.

4 முறை திருமணம்

ஜெனிபர் லோபஸ் இதுவரை 4 முறை திருமணம் செய்திருக்கிறார். முதலில், ஓஜானி நோவா என்பவருடன் திருமணம் நடந்தது. ஓராண்டில் அந்த திருமணம் முடிவுக்கு வந்தது.

இதன்பின்னர் நடன கலைஞரான கிறிஸ் ஜட் என்பவரை 2001-ம் ஆண்டில் ஜெனிபர் திருமணம் செய்து கொண்டார். 2003-ம் ஆண்டில் அதுவும் முடிவுக்கு வந்தது. 2004-ம் ஆண்டில் பாடகர் மார்க் ஆண்டனி என்பவரை கரம்பிடித்த ஜெனிபர், 7 ஆண்டுகள் அவருடன் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்.

இரட்டை குழந்தைகள்

இந்த தம்பதிக்கு 2008-ம் ஆண்டில் மேக்ஸ் மற்றும் எம்மி என இரட்டை குழந்தைகள் பிறந்தனர். ஆனாலும், 2011-ம் ஆண்டில் பிரிவை அறிவித்த அவர்கள், 2014-ம் ஆண்டில் பிரிந்தனர்.

இதன்பின்பு, பென் அப்லெக் என்பவருடந் 4-வது முறையாக ஜெனிபர் திருமணம் செய்து கொண்டார். இதில், விசேஷம் என்னவென்றால், இருவரும் 2000-ம் ஆண்டிலேயே திருமணத்திற்காக நிச்சயம் செய்து கொண்டனர். பின்னர், ஏனோ அந்த திருமணம் நடைபெறாமல் போனது.

இரு தசாப்தங்களுக்கு பின்பு, மீண்டும் அவர்களுக்குள் காதல் தோன்றியுள்ளது. 2022-ம் ஆண்டில் பென் அப்லெக்கை ஜெனிபர் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இறுதியாக 2024-ல் அதுவும் முறிந்து போனது. இருவரும் கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரியில் பிரிந்தனர்.

X