வைரலாகும் நடிகை அதிதி ஷங்கர் பகிர்ந்த புகைப்படம்

நடிகை அதிதி ஷங்கர் ‘விருமன்’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
வைரலாகும் நடிகை அதிதி ஷங்கர் பகிர்ந்த புகைப்படம்
Published on: 

நடிகை அதிதி ஷங்கர் மருத்துவர் தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் கார்த்திக் ஜோடியாக ‘விருமன்’ படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ படத்திலும் நடித்தார். அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளியுடன் ‘நேசிப்பாயா’ படத்தில் நடித்துள்ளார்.அர்ஜுன் தாஸ், நடிகை அதிதி ஷங்கர் உடன் இணைந்து நடித்துள்ள ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இயக்குநர் ஷங்கரின் மகள்

இயக்குநர் ஷங்கருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன். இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் கடந்த 2021-ம் ஆண்டு தனது மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடித்து மருத்துவரானார். இவர் அவ்வப்போது தனது மருத்துவம் தொடர்பான புகைப்படங்களையும், மருத்துவப் படிப்பு குறித்த அனுபவங்களையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

மருத்துவம் படித்த அதிதி ஷங்கர்

இந்த நிலையில், மருத்துவம் படித்த அதிதி ஷங்கர் மருத்துவர் தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘டாக்டர் அதிதி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை சாய் பல்லவிக்கு அடுத்ததாக டாக்டர் நடிகை அதிதி ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com