அர்ஜுன் தாசுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி


அர்ஜுன் தாசுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
x

காதல், காமெடி கலந்த புதிய வெப் தொடர் ஒன்றில் கதாநாயகனாக அர்ஜுன் தாஸ் நடித்து வருகிறார்.

சென்னை,

"காதலில் சொதப்புவது எப்படி" படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி மோகன். அதன்பின்னர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான வாயை மூடி பேசவும் படத்தை இயக்கியிருந்தார். தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 1, 2 படத்தி இயக்கி பிரலமானார்.

இவர் தற்போது காதல், காமெடி கலந்த புதிய வெப் தொடர் ஒன்றை இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக அர்ஜுன் தாஸ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சில மாதங்களாக சென்னை மற்றும் புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.

இப்போது இதில் கதாநாயகியாக பிரபல நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே தமிழில் ஜகமே தந்திரம், கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் 1, 2, தக் லைப், மாமன் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story