பழனி முருகன் கோவிலில் நடிகை அமலாபால் சாமி தரிசனம்

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் நடிகை அமலா பால் சாமி தரிசனம் செய்தார்.
பழனி முருகன் கோவிலில் நடிகை அமலாபால் சாமி தரிசனம்
Published on

திண்டுக்கல்,

சிந்து சமவெளி, மைனா, தெய்வத்திருமகள் உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அமலாபால். தொடர்ந்து மலையாளம், தெலுங்கு திரை உலகில் நடித்து வந்த அமலாபால் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இலாய் என்ற மகன் இருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகிய அமலாபால் மீண்டும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையல், உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு நடிகை அமலாபால் நேற்று சென்றார். அவர் அடிவாரத்தில் இருந்து படிப்பாதை வழியாக மலைக்கோவில் சென்று, மலைக்கோவிலில் நடைபெற்ற உச்சிக்கால பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்பு போகர் சன்னதிக்கு சென்று வழிபட்டார். பின்னர் ரோப் கார் வழியாக அமலாபால் அடிவாரம் சென்று காரில் புறப்பட்டார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com