9 மாத கருவுடன் அழகு நடைபோட்ட நடிகை அமலாபால்

கேரள மாநிலம் கொச்சியில் அன்னையர் தினத்தை முன்னிட்டு பேஷன் ஷோ ஒன்று நடைபெற்றது.
9 மாத கருவுடன் அழகு நடைபோட்ட நடிகை அமலாபால்
Published on

திருவனந்தபுரம்,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலா பால். இவர் கடந்த வருடம் நவம்பர் 3-ம் தேதி தனது நீண்ட நாள் நண்பர் ஜெகத் தேசாயை திருமணம் செய்துகொண்டார். தற்போது அமலாபால் 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளிவந்த ஆடுஜீவிதம் திரைப்படம் பிரமாண்ட வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்தது.

இந்நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் அன்னையர் தினத்தை முன்னிட்டு பேஷன் ஷோ ஒன்று நடைபெற்றது. இது கர்ப்பிணிகளுக்கான பேஷன் ஷோவாகும். அதில் நடிகை அமலா பால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கிண்டர் ஹாஸ்பிடல்ஸ் சார்பாக நடைபெற்ற கர்ப்பம் மற்றும் தாய்மை பற்றிய விழிப்புணர்வு பேஷன் ஷோவில் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர். 9 மாத கருவுடன் அமலாபாலும் அழகு நடை போட்டார். தொடர்ந்து வெற்றி பெற்ற கர்ப்பிணிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com