இணையத்தில் வைரலாகும் நடிகை எமி ஜாக்சன் வீடியோ

எமி ஜாக்சன் நடிப்பில் கடைசியாக 'மிஷன் சாப்டர் 1' திரைப்படம் வெளியானது.
Actress Amy Jackson's video goes viral on the internet
Published on

சென்னை,

லண்டனை சேர்ந்தவர் எமி ஜாக்சன். தன்னுடைய 17 வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்து பின்னர் அழகி போட்டியிலும் கலந்து கொண்டவர். மிஸ் இங்கிலாந்து போட்டியில் கலந்து கொண்ட எமி ஜாக்சன், இரண்டாவது இடம் பிடித்தார்.

தமிழில் 'மதராசபட்டினம்' படம் மூலம் அறிமுகமான இவர், ஐ, தங்கமகன், தாண்டவம், கெத்து, தெறி, 2. 0  உள்பட படங்களில் நடித்து பிரபலமானார். இவர் நடிப்பில் கடைசியாக, அருண் விஜய் நடித்திருந்த 'மிஷன் சாப்டர் 1' திரைப்படம் வெளியானது.

அதன்பிறகு தமிழில் நடிக்காத எமி ஜாக்சனுக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களுக்குப் ஆண் குழந்தை உள்ளநிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின்னர், பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்து எமி ஜாக்சன் திருமணம் செய்து கொண்டார்.

எமி ஜாக்சனுக்கு ஏற்கனவே மகன் உள்ள நிலையில், தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் விருது நிகழ்ச்சி ஒன்றில், புதிய ஹேர் ஸ்டைலுடன் எமி ஜாக்சன் கலந்து கொண்ட வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com