பிரபல இந்தி நடிகை மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல இந்தி நடிகை அனன்யா ராஜ் (வயது 27).
பிரபல இந்தி நடிகை மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி
Published on

மும்பை,

பிரபல இந்தி நடிகை அனன்யா ராஜ் (வயது 27). இவர் இந்தியில் 7 ஹவர்ஸ் டு ஹோ, தி பைனல் எக்சிட், கோஸ்ட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் தஹ்டிலி என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும், பல்வேறு குறும்படங்கள், இசை நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். டிவி வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.

அனன்யா ராஜ் மரணம்

இந்நிலையில், அனன்யா ராஜ் மரணமடைந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் இன்று தெரிவித்துள்ளனர். உடல்நலம், மனநலம் தொடர்பான பிரச்சினைகளை சந்தித்து வந்த அனன்யா ராஜ் கடந்த மாதம் 15ம் தேதி வீட்டில் உறக்கத்திலேயே மரணமடைந்துவிட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அனன்யா ராஜ்-இன் மறைவு செய்தி அவரது ரசிகர்கள், திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனன்யாவின் மறைவுக்கான முழுமையான காரணத்தை குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com