பாத் டப்பில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா

ஆண்ட்ரியாவின் கவர்ச்சி படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். அந்தவகையில் தற்போது பாத் டப்பில் குளிப்பது போன்ற படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
பாத் டப்பில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஆண்ட்ரியா
Published on

தமிழ் சினிமாவில் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் ஆண்ட்ரியா. பச்சக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், இது நம்ம ஆளு, தரமணி, மாஸ்டர், அரண்மனை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகையாக வலம் வரும் ஆண்ட்ரியா பாடகியும் கூட. கண்ணும் கண்ணும் நோக்கியா..., கற்க கற்க கள்ளம் கற்க..., பூக்கள் பூக்கும் தருணம்..., கூகுள் கூகுள் பண்ணி பார்த்தேன்... போன்ற பல பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா... என்ற பாடலை தனது கிறங்கடிக்கும் குரலால் பாடி கிளுகிளுப்பூட்டினார்.

ஆண்ட்ரியாவின் கவர்ச்சி படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். அந்தவகையில் தற்போது பாத் டப்பில் குளிப்பது போன்ற படங்களை அவர் வெளியிட்டுள்ளார். நுரை பொங்கியிருக்கும் பாத் டப்பில் பால் நிறத்தில் ஆண்ட்ரியா கவர்ந்திழுப்பது போன்ற படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றன. என்ன விலை அழகே... என்றும், தினமும் பாலில் குளிப்பீர்களா..., இந்த அழகை படைத்த இறைவனுக்கு நன்றி... என அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு-2, மாளிகை படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது. கா, நோ என்ட்ரி, வட்டம் மற்றும் பெயரிடப்படாத 2 படங்களிலும் ஆண்ட்ரியா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com