சில வருட இடைவெளிக்குப்பின் தமிழ் படத்தில் மீண்டும் அஞ்சலி

சில வருட இடைவெளிக்குப்பின், அஞ்சலி மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கிறார். ராம் டைரக்டு செய்கிறார்.
சில வருட இடைவெளிக்குப்பின் தமிழ் படத்தில் மீண்டும் அஞ்சலி
Published on

அஞ்சலி, ஆந்திராவைச் சேர்ந்தவர். கற்றது தமிழ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அங்காடி தெரு, கலகலப்பு உள்பட பல தமிழ் படங்களில் நடித்தார். அவருக்கும், அவருடைய சித்திக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறில், அஞ்சலி வீட்டைவிட்டு வெளியேறி, ஐதராபாத்தில் குடியேறினார்.

அங்கிருந்தபடியே சில தமிழ் படங்களில் நடித்தார். அவருக்கு தமிழ் படங்களை விட, தெலுங்கு பட வாய்ப்புகள் நிறைய வந்தன. அதனால் ஐதராபாத்திலேயே நிரந்தரமாக தங்கிவிட்டார்.

ஆரம்பத்தில் நடிகர் ஜெய்யுடன் இணைத்து பேசப்பட்ட அஞ்சலி, சமீபகாலமாக ஒரு தெலுங்கு பட அதிபருடன் இணைத்து பேசப்படுகிறார். சில வருட இடைவெளிக்குப்பின், அவர் மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ராம் டைரக்டு செய்கிறார்.

நிவின்பாலி கதாநாயகனாக நடிக்க, கதா நாயகி, அஞ்சலி. ஒரு முக்கிய வேடத்தில் சூரி நடிக்கிறார். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் படம் தயாராகிறது. படப்பிடிப்பு தனுஷ்கோடி, கேரள மாநிலம் வண்டி பெரியார், வாகமன், சென்னை ஆகிய இடங்களில் நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com