சினிமாவுக்காக பெயரை மாற்ற முடியாது- அஞ்சலி நாயர்

நடிகை அஞ்சலி நாயர் சினிமாவுக்காக பெயரை மாற்ற முடியாது என தனது கருத்தினை கூறியுள்ளார்.
சினிமாவுக்காக பெயரை மாற்ற முடியாது- அஞ்சலி நாயர்
Published on

தமிழில் நெடுநெல் வாடை படம் மூலம் அறிமுகமான அஞ்சலி நாயர், 'டாணாக்காரன்' படத்திலும் நடித்துள்ளார். தற்போது அவரது நடிப்பில் காலங்களில் அவள் வசந்தம் படம் திரைக்கு வந்துள்ளது. இதில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளன. 

நடிகையான அனுபவம் குறித்து அஞ்சலி நாயர் அளித்துள்ள பேட்டியில், ''எனது பெற்றோர் ராணுவத்தில் உள்ளனர். இதனால் சிறு வயதில் இருந்தே தைரியம் உள்ள பெண்ணாக வளர்ந்தேன். முகநூலில் எனது படத்தை பார்த்து நெடுநெல் வாடை படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தனர். தெலுங்கு படமொன்றில் நடிக்க இருக்கிறேன். அங்கு அஞ்சலி நாயர் என்ற பெயரை மாற்றச்சொன்னார்கள். அம்மா, அப்பா வைத்த பெயரை மாற்ற முடியாது என்று மறுத்து விட்டேன். சினிமாவுக்காக பெயரை மாற்றுவது சரியல்ல. தமிழில் புதிதாக விஜய்சேதுபதியுடன் ஒரு படத்திலும், இன்னொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். நல்ல நோக்கத்துக்காக எனது கையில் எல்லா மத சின்னங்களையும் பச்சை குத்தியுள்ளேன். மதத்தின் பெயரால் பிளவு வரக்கூடாது. மதம் கடவுள் உருவாக்கியது அல்ல. நாமே உருவாக்கியது. கடவுள் அவரது குழந்தையாகவே அனைவரையும் பார்க்கிறார். மதத்தின் பெயரால் வேறுபட்டு இருப்பது கடவுளுக்கே எதிரானது" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com