நடிகர் டினி டாம் மீது நடிகை அன்சிபா ஹசன் போலீசில் புகார்

டினி டாம் - அச்னிபா ஹாசன் இடையேயான மோதல் மலையாள திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நடிகர் டினி டாம் மீது நடிகை அன்சிபா ஹசன் போலீசில் புகார்
Published on

மலையாள பிரபல நடிகை அன்சிபா ஹசன். இவர் திரிஷ்யம் திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் மூத்த மகளாக நடித்த வர். அவர், கொச்சியில் உள்ள இன்போ பார்க் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், எனக்கும், எனது குடும்பத்திற்கும் எதிராக வாட்ஸ்-அப் குழுவில் சினிமா துறையில் உள்ள நடிகர்களை கூட்டு சேர்த்து நடிகர் டினி டாம் சைபர் தாக்குதல் நடத்தி வருகிறார். திரையுலகில் நான் மத வெறுப்புணர்வை தூண்டும் விதத்தில் செயல்படுவதாக பொய் பரப்பி வருகிறார். எனவே, நடிகர் டினி டாம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. சமீபத்தில் நடிகர் டினி டாம் சமூகத்திற்கே அவமானம். பொய்யான முகமூடி அணிந்து இது போன்ற நபர்கள் வாழ்கிறார்கள் என்று நடிகை அன்சிபா ஹசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மலையாள நடிகர் சங்கமான "அம்மா" அமைப்பில் தனக்கு எதிராக பெரிய சதி நடப்பதாக அன்சிபா ஹாசன் குற்றம் சாட்டியிருந்தார். அம்மா அமைப்பின் இணை செயலாளராக இருந்த அவர், கடந்த பிப்ரவரி மாதம் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு நடிகர் டினி டாம் தான் காரணம் என்றும் அன்சிபா கூரியிருந்தார். இது குறித்து அன்சிபா ஹாசன் கூறுகையில், கலை நிகழ்ச்சி ஒன்றிற்கு மத நிறுவனம் ஸ்பான்சர் செய்வதை எதிர்த்ததால், நடிகர் டினி டாம் தன் மீது மதச்சாயம் பூசி திரைத்துறையில் அவதூறு பரப்பினார்” என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்து இருந்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது டினி டோம் மீது காவல்துறையிலும் புகாரளித்துள்ளார். டினி டாம் - அச்னிபா ஹாசன் இடையேயான மோதல் மலையாள திரையுலகில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com