காதலில் பிரிவும் அழகானதுதான் - நடிகை அனுபமா பரமேஸ்வரன்

அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவான ‘கிரேஸி கல்யாணம்’ வருகிற அக்டோபர் 16 ஆம் தேதி வெளியாகிறது.
காதலில் பிரிவும் அழகானதுதான் - நடிகை அனுபமா பரமேஸ்வரன்
Published on: 

நடிகை அனுபமா பரமேஸ்வரன் காதலில் பிரிவு குறித்து ‘கிரேஸி கல்யாணம்’ புரமோஷன் நிகழ்வில் பேசியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்து வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தனுஷின் ‘கொடி’ படம் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தார். சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார்.

சர்ச்சையைக் கிளப்பிய இன்ஸ்டாகிராம் பதிவுகள்:

சமீபத்தில் மீண்டும் இன்ஸ்டாகிராமிற்கு வந்த அனுபமா பரமேஸ்வரன், சுதந்திரம், மன அமைதி மற்றும் ‘என்னை நானே தேர்ந்தெடுத்துக்கொள்கிறேன்’ போன்ற வரிகளுடன் உணர்ச்சிப்பூர்வமான பல பதிவுகளைப் பகிர்ந்திருந்தார்.

காதல் வன்முறை

அனுபமா பரமேஸ்வரன் நீண்ட காலமாக நடிகர் துருவ் விக்ரமுடன் இணைத்துப் பேசப்பட்டு வந்த நிலையில் நேர்காணலில் “நார்ஸிஸ்ட் காதல் வன்முறை குறித்து யாரும் பெரிதாக அறிவதில்லை. இது உளவியல் ரீதியாக நம்மைத் துன்புறுத்துவது. என் முன்னாள் காதலில் நடந்தது இதுதான். கடந்த 2 ஆண்டுகளாக நான் இதை அனுபவித்து வந்தேன். ஆனால், இது வன்முறைதான் என்பதை அறியவே நீண்ட காலம் ஆகிவிட்டது.

அந்த காலகட்டத்தில்தான் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் பாதிக்கப்பட்டு, என் உடல் எடையைக் குறைத்தேன். எனது இன்ஸ்டாகிராம் பதிவுக்குப் பின்னால் இரண்டு ஆண்டுகால வலியும் போராட்டங்களும் உள்ளன.” என்றார்.

காதலில் பிரிவும் அழகானதுதான்

தற்போது அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவான ‘கிரேஸி கல்யாணம்’ வருகிற அக்டோபர் 16 ஆம் தேதி வெளியாகிறது. இதன் புரமோஷன் நிகழ்வில் கலந்துகொண்ட அனுபமாவிடம் காதல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “காதலும் அழகுதான். அதேநேரம், பிரிவும் அழகானதுதான். நீங்கள் அதிலிருந்து எதை உணர்ந்தீர்கள் என்பதைப் பொறுத்துதான்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com