

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம், சமீபத்தில் ‘பைசன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இந்த ஜோடியின் காதல் காட்சிகள் அந்த படத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் படங்கள் நடித்து மக்களின் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.கடந்த 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் காதல் படமான ‘பிரேமம்’ மூலம் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து தமிழ் பக்கம் வந்தவர் தனுஷின் ‘கொடி’ படம் மூலம் அறிமுகமானார். அடுத்தடுத்து படங்கள் நடித்தவர் இப்போது கடைசியாக துருவ் விக்ரமுக்கு ஜோடியாக ‘பைசன்’ படத்தில் நடித்திருந்தார்,
‘பைசன்’ படத்தின் புரமோஷன் தொடர்பாக துருவ் விக்ரம் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சென்ற நிலையில், அவர்களுக்குள் காதல் இருப்பதாக செய்திகள் பரவின.
இந்த நிலையில் துருவ் விக்ரம் நேற்று முன்தினம்‘பாடி பில்டிங்’ தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆணழகன் போட்டிகளில் பங்கேற்பவர்களைப் போல அசத்தலான உடற்கட்டுடன் அவர் வெளியிட்டிருந்த இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவிற்கு முதல் கமெண்டாக அனுபமா பரமேஸ்வரன் 'பயர்' எமோஜியை பதிவிட்டிருந்தார். அவரது கமெண்டிற்கு 12 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் லைக் போட்டிருந்தனர். துருவ் விக்ரமின் பதிவுக்கு, அனுபமா முதல் ஆளாக கமெண்ட் போட்டது, பலரிடமும் கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ் சினிமாவில் அடுத்த காதல் ஜோடி தயார் என்றே பலரும் சொல்கிறார்கள்.