வெளிநாட்டில் சிகிச்சை பெற்று எடை குறைத்த நடிகை அனுஷ்கா

நடிகை அனுஷ்கா வெளிநாட்டில் சிகிச்சை பெற்று எடை குறைத்துள்ளார்.
வெளிநாட்டில் சிகிச்சை பெற்று எடை குறைத்த நடிகை அனுஷ்கா
Published on

அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் எடையை கூட்டி குண்டு பெண்ணாக நடித்த பிறகு மீண்டும் ஒல்லியாக முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. கடும் உடற்பயிற்சிகள், உணவு கட்டுப்பாடு, யோகா என்று தொடர் பயிற்சிகளில் ஈடுபட்டும் பலன் இல்லை. இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன.

தமிழ், தெலுங்கில் அனுஷ்காவை ஜோடியாக்கும்படி டைரக்டர்களிடம் வற்புறுத்திய முன்னணி கதாநாயகர்கள் எடை கூடியதால் அவரை ஒதுக்க தொடங்கினர். இளம் நடிகர்கள் படங்களிலும் நடிக்க முடியவில்லை. இதனால் விரக்தியான அனுஷ்காவுக்கு தோழிகள் ஆஸ்திரியா நாட்டுக்கு சென்று சிகிச்சை மூலம் எடையை குறைக்கும்படி ஆலோசனை கூறினர்.

ஏற்கனவே தெலுங்கு பிரபலங்கள் பலர் அங்கு சென்று சிகிச்சை பெற்று எடை குறைத்து திரும்பி உள்ளனர். இதைத்தொடர்ந்து அனுஷ்காவும் ஆஸ்திரியா சென்று சில மாதங்கள் தங்கி சிகிச்சை பெற்றார். சிகிச்சைக்கு பிறகு இப்போது எடையை பெரிய அளவில் குறைத்து ஒல்லியாக மாறி இருக்கிறார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனுஷ்காவா இது என்று பலரும் வியந்து பேசி வருகிறார்கள். இப்போது அவருக்கு மீண்டும் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. அனுஷ்காவுக்கும் பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல் என்றும், விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் தகவல் பரவி வருகிறது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com