பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அனுஷ்கா

நடிகை அனுஷ்கா தனது தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு, பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பெற்றோருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அனுஷ்கா
Published on

சென்னை,

நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு பட உலகில் 12 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். அருந்ததியில் மந்திரவாதியை பந்தாடிய ஆக்ரோஷமும், பாகுபலி, பாகுபலி-2 ருத்ரமாதேவி படங்களில் ராணியாக வந்து வாள் வீசியதும், இஞ்சி இடுப்பழகி படத்தில் 20 கிலோ எடை கூடி குண்டு பெண்ணாக வந்ததும் இவரது நடிப்பு திறமையை பறைசாற்றுவதாக அமைந்தன. வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், லிங்கா, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்கள் அனுஷ்கா நடிப்பில் வந்து ரசிகர்களை கவர்ந்தன.பாகமதி படத்திலும் வித்தியாசமான நடிப்பால் கவர்ந்து இருக்கிறார்.

இந்தநிலையில், தற்போது கொரோனா காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். நடிகர், நடிகைகளும் வீட்டில் இருக்கின்றனர். சில நடிகைகள், இன்ஸ்டாகிராமில் தாங்கள் வீட்டில் என்ன செய்கிறோம் என்பதை வீடியோ மற்றும் போட்டோவாக வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வீட்டில் தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழித்து வரும் நடிகை அனுஷ்கா ஷெட்டி, தனது தந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்ஸ்டாகிராமில், அப்பா ஏ.என்.விட்டல், அம்மா பிரஃபுல்லா ஆகியோருடன் இருக்கும் போட்டோவை பதிவு செய்துள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை அனுஷ்கா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

மிகவும் அழகான, அன்பான, உற்சாகமான தந்தை நீங்கள். எங்களுக்காக சிறந்த விஷயங்களை செய்திருக்கிறீர்கள். இன்று(20-ம் தேதி) உங்கள் நாள். எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருங்கள், ஏனென்றால், அது எங்களை மகிழ்விக்கும். இனிய பிறந்த நாள் அப்பா' என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com