தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி - போஸ்டர் வெளியிட்ட பட நிறுவனம்

'ராயன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி - போஸ்டர் வெளியிட்ட பட நிறுவனம்
Published on

சென்னை,

நடிகர் தனுஷ் படங்களில் நடிப்பது மட்டுமின்றி படங்களை இயக்கியும் வருகிறார். தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்துக்கு 'ராயன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. 'ராயன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ராயன் படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.அந்த வகையில், ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், நடிகை துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் ஏற்கனவே வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது 'ராயன்' படத்தில் நடிகை அபர்ணா பாலமுரளி நடிப்பதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com