கவர்ச்சி உடையால் உருவக் கேலியில் சிக்கிய நடிகை

செலினா கோமசை உருவக்கேலி செய்தவர்களுக்கு சிலர் பதிலடி கொடுத்துள்ளனர்.
கவர்ச்சி உடையால் உருவக் கேலியில் சிக்கிய நடிகை
Published on

பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான செலினா கோமஸ் உருவக்கேலியில் சிக்கினார். இவர் தன்னை கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த புகைப்படத்தில் உடை சற்று விலகி இருந்ததை பார்த்த பலரும் வலைதளத்தில் வைரலாக்கி உருவக்கேலி செய்தனர். அவதூறான பதிவுகளையும் வெளியிட்டனர். இது பரபரப்பானது.

புகைப்படம் தவறாக இருந்ததை செலினா கோமசும் கவனித்தார். இதையடுத்து உடனடியாக வலைதளத்தில் இருந்து அவசர அவசரமாக புகைப்படத்தை அவர் நீக்கி விட்டார். செலினா கோமசை உருவக்கேலி செய்தவர்களுக்கு சிலர் பதிலடி கொடுத்துள்ளனர்.

ஆட்டோ இம்யூன் நோயால் அவதிப்படும் செலினா கோமஸ் தனது உடல் நிலை குறித்து வெளிப்படையாக சொல்லி அதில் இருந்து மீண்டுவர பலருக்கும் தைரியம் கொடுப்பவர். அவரை கேலி செய்வது சரியல்ல என்று கண்டித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com