கோவாவில் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல நடிகை...வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை ராஷி சிங் 'சஷி' படத்தின் மூலம் அறிமுகமானார்.
சென்னை,
நடிகை ராஷி சிங் சமீபத்தில் கோவாவில் நண்பர்களுடன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். தற்போது அந்த கொண்டாட்ட புகைப்படங்களை அவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகை ராஷி சிங் தெலுங்கில் ‘சஷி’ படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்திற்குப் பிறகு பிரேம் குமார், பூதத்தம் பாஸ்கர், பிரசன்ன வடனம், பிளைண்ட் ஸ்பாட் போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில், ராஜ் தருண் நடித்த ‘பஞ்ச் மினார்’ படத்திலும் அவர் நடித்திருந்தார். பல படங்களில் நடித்திருந்தாலும், அவை எதுவும் பெரிய அளவில் அவருக்கு வெற்றியைத் தரவில்லை.
தற்போது, ராஷி சிங் ‘3 ரோஸஸ்’ சீசன் 2 என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்தத் தொடர் தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.
Related Tags :
Next Story






