ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் நடிகை தீபிகா படுகோனே... ரசிகர்கள் வாழ்த்து

ஆஸ்கர் விருதுகளை வழங்கப்போகும் பிரபலங்களின் முதற்கட்ட பட்டியலை ஆஸ்கர் கமிட்டி வெளியிட்டுள்ளது.
ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில் நடிகை தீபிகா படுகோனே... ரசிகர்கள் வாழ்த்து
Published on

வாஷிங்டன்,

சர்வதேச அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் கவுரவமிக்க விருதாக 'ஆஸ்கர் விருது' கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடத்தப்படுகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து திரைக்கலைஞர்கள், திரைத்துறை பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

அந்த வகையில் 95-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு வருகிற 12-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழா தொடர்பான அறிவிப்புகளை ஆஸ்கர் கமிட்டி வெளியிட்டு வருகிறது. அதன்படி ஆஸ்கர் விருதுகளை வழங்கப்போகும் பிரபலங்களின் முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 16 பேர்கள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில் இந்தி நடிகை தீபிகா படுகோனே பெயரும் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

The Academy (@TheAcademy) March 2, 2023 ">Also Read:

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com