அனுபமாவின் “லாக் டவுன்” படத்தை பாராட்டிய நடிகை தேவயானி

ஏஆர் ஜீவா இயக்கத்தில் அனுபமா நடித்த ‘லாக் டவுன்’ படம் நாளை வெளியாகிறது.
அனுபமாவின் “லாக் டவுன்” படத்தை பாராட்டிய நடிகை தேவயானி
Published on

லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள ‘லாக் டவுன்’ திரைப்படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ஏஆர் ஜீவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

‘லாக் டவுன்’ திரைப்படம் வருகின்ற 30ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. ஒரு ஆண்டுக்கு மேலாக ரிலீஸுக்காக காத்திருந்த இப்படம் கடந்த டிசம்பர் 12 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ‘லாக் டவுன்’ படத்தை நடிகை தேவயானி சிறப்பு திரையிடலில் பார்த்துள்ளார். பின்பு படம் குறித்து பேசிய அவர், “படம் ரொம்ப எமோஷனலா இருக்கு. அனுபமா ரொம்ப அழகா நடிச்சிருக்காங்க. டைட்டிலே பார்த்தீங்கன்னா, உண்மை சம்பவத்தை வைத்து இந்த படத்த எடுத்திருக்காங்க. லாக்டவுன் சமயத்துல ஒரு பெண்ணோட போராட்டம்தான் கதை. படக்குழுவுக்கு எனது வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com