பிடித்த நடிகர்...‘பேச்சுலர்’ பட நடிகை சொன்னது யாரை தெரியுமா?

‘பேச்சுலர்’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் திவ்ய பாரதி.
சென்னை,
ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான ‘பேச்சுலர்’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் திவ்ய பாரதி. ‘பேச்சுலர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவர் தமிழில் பெரிய நாயகியாக உருவெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கேற்ப அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது, தெலுங்கில் ’கோட்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சுதிகாலி சுதீர் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தின் மூலம் திவ்ய பாரதி தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஒரு நேர்காணலில் கலந்துகொண்டு பேசிய திவ்ய பாரதி, தெலுங்கில் தனக்கு பிடித்த நடிகர் பவன் கல்யாண் என்று கூறினார். அவர் நடித்த ‘குஷி’ திரைப்படம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், பல முறை அந்தப் படத்தை பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். நடிகர் அல்லு அர்ஜுனையும் தனக்கு பிடித்த நடிகர் என்று கூறினார்.






