

நடிகை ஹன்சிகா மோத்வானி, தமிழ் சினிமாவின் ‘சின்ன குஷ்பு’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர். மாப்பிள்ளை, வேலாயுதம், ஓகே ஓகே, எங்கேயும் காதல் உள்ளிட்ட படங்களில் நடித்த காலத்தில், அவர் சற்றுக் கூடுதல் எடையுடன் தோன்றினார்.
அந்த காலகட்டத்திலும், ஹன்சிகாவின் தோற்றத்தை ரசிகர்கள் ரசித்தே வந்தனர். இதனைத் தொடர்ந்து, சில ஆண்டுகளில் அவர் உடல் எடையை கணிசமாகக் குறைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். பல கிலோ எடை குறைத்த போதிலும், எந்த விதமான டயட்டையும் பின்பற்றவில்லை என ஹன்சிகா தெரிவித்தது கவனம் பெற்றது.
இந்த நிலையில், 34 வயதிலும் 16 வயது பெண் போல் இளமை தோற்றத்துடன் இருப்பதற்கான ரகசியத்தை ஹன்சிகா தற்போது வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
“நான் டயட்டில் இல்லை. ‘பை லேட்ஸ்’ என்ற ஒரு வகை உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வருகிறேன். இந்த பயிற்சி முக்கியமாக வயிறு, இடுப்பு மற்றும் முதுகுத் தசைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. மூட்டுகளில் அதிக அழுத்தம் ஏற்படாமல், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த இது உதவுகிறது.
இது எனக்கு ஒரு நிலையான பயிற்சியாக உள்ளது. முழு உடலையும் இயக்கும் பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறேன். அதேபோல், யோகா செய்வதும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்,” என ஹன்சிகா தெரிவித்துள்ளார்.