திரிவேணி சங்கமத்தில் நடிகை ஹேமமாலினி புனித நீராடல்

பா.ஜ.க. எம்.பி.யும், நடிகையுமான ஹேமமாலினி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
திரிவேணி சங்கமத்தில் நடிகை ஹேமமாலினி புனித நீராடல்
Published on

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த 13-ந்தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ந்தேதி வரை மகா கும்பமேளா நடைபெற உள்ளது.

உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் பிரயாக்ராஜில் திரண்டு அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். அதே போல் பல்வேறு திரை பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கும்பமேளாவிற்கு வருகை தருகின்றனர்.

அந்த வகையில் பா.ஜ.க. எம்.பி.யும், நடிகையுமான ஹேமமாலினி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மங்களகரமான நாளில் புனித நீராட தனக்கு வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுவதாக தெரிவித்தார். இதேபேல், யேகா குரு பாபா ராம்தேவ் மற்றும் துறவிகள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com