மகிழ்ச்சி செய்தியைப் பகிர்ந்த நடிகை இலியானா


மகிழ்ச்சி செய்தியைப் பகிர்ந்த  நடிகை இலியானா
x
தினத்தந்தி 2 Jan 2025 7:26 PM IST (Updated: 10 May 2025 5:11 PM IST)
t-max-icont-min-icon

நடிகை இலியானா தான் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இலியானா டி குரூஸ். கேடி என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின், விஜயுடன் நண்பன் என்ற படத்தில் நடித்து, தமிழ் சினிமாவில் பிரபலமானார். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி, பாலிவுட் படங்களிலும் நடித்து வந்தார்.

சினிமாவை விட்டு விலகிய இலியானா, புகைப்படக் கலைஞர் ஒருவருடன் லிவிங் டுகெதரில் இருந்து வந்தார். தனது கணவரது அடையாளத்தை நீண்ட காலமாக மூடி மறைத்து வந்த இலியானா, அதன் பின் வெளிநாட்டைச் சேர்ந்த மைக்கேல் டோலன் தான் தனது கணவர் என்றும், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், குழந்தைக்கு கோவா பீனிக்ஸ் என்று பெயரிட்டதாகவும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். சமீபத்திய பேட்டியில் தனது திருமண வாழ்க்கை பயணத்தை குறித்து பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில் தான் மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார் இலியானா. இது தொடர்பான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

1 More update

Next Story