மெலிந்த தேகத்தில் இந்துஜா

தீவிர உடற்பயிற்சி மற்றும் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை இந்துஜா கடைப்பிடிக்க தொடங்கி மெலிந்த தேகம் கொண்ட நடிகையாக இந்துஜா மாறியிருக்கிறார்.
மெலிந்த தேகத்தில் இந்துஜா
Published on

மேயாத மான் படத்தில் அடாவடி தங்கையாக நடித்து கவனம் ஈர்த்தவர் இந்துஜா. மெர்குரி, 60 வயது மாநிறம், பில்லாபாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர், பிகில், மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் வாட்ட சாட்டமான உடல்வாகு கொண்டவர். அவரது உடல் எடை அதிகமாக இருப்பதாகவும், எடையை குறைத்தால் இன்னும் அழகாக தெரியலாம் என்றும் அவரது நண்பர்கள் ஆலோசனை வழங்கினர். இதையடுத்து, தீவிர உடற்பயிற்சி மற்றும் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை இந்துஜா கடைப்பிடிக்க தொடங்கினார். இதற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது.

தற்போது மெலிந்த தேகம் கொண்ட நடிகையாக இந்துஜா மாறியிருக்கிறார். உடல் எடை குறைந்த தனது புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்துஜா பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். என்ன அழகு... எத்தனை அழகு... என்றும், அடுத்த கீர்த்தி சுரேஷ் என்றும் கருத்துகளை பதிவிடுகிறார்கள். ரசிகர்களின் பாராட்டு மழையில் குளிர்ந்து போன இந்துஜா, முகமலர்ச்சியுடன் காணப்படுகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com