துபாயில் நடனப்பள்ளி தொடங்கிய நடிகை இனியா

நடிகை இனியா 'ஆத்ரேயா ஆர்ட்ஸ் ஸ்டூடியோ' என்ற நடன பள்ளியை துபாயில் தொடங்கி உள்ளார்.
துபாயில் நடனப்பள்ளி தொடங்கிய நடிகை இனியா
Published on

'வாகை சூடவா' படத்தில் நடித்தன் மூலம் அதிகம் அறியப்பட்டார். அதன்பிறகு ஏராளமான படங்களில் நடித்தார். அடிப்படையில் நடன கலைஞரான இனியா தற்போது துபாயில் நடன பள்ளி தொடங்கி உள்ளார். ஏற்கெனவே கேரளாவில் 'அனோரா ஆர்ட் ஸ்டூடியோ' என்ற பெயரில் ஆடை வடிவமைப்பு நிறுவனத்தை தொடங்கினார். தற்போது 'ஆத்ரேயா ஆர்ட்ஸ் ஸ்டூடியோ' என்ற நடன பள்ளியை துபாயில் தொடங்கி உள்ளார்.

இதுகுறித்து இனியா கூறும்போது "நடனத்துறையில் பாரம்பரியம் மற்றும் நவீன கலை இரண்டையும் கலந்து புதுவித கலை வடிவம் கற்பிப்பதில் ஆத்ரேயா டான்ஸ் ஸ்டூடியோ சிறந்து விளங்குகிறது. பல்வகை நடனங்களை கற்றுக் கொடுப்பதோடு, மேடை நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழாக்கள், பிரபலங்கள் கலந்து கொள்ளும் விழாக்கள், பிராண்டு அறிமுக நிகழ்வுகள், சிறப்பு விழாக்கள், பருவகால நிகழ்வுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் என பலவித நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் ஆத்ரேயா முழுவீச்சில் செயல்படுகிறது" என்றார்.

இனியா தற்போது தெலுங்கில் உருவாகும் ஸ்வீட்டி நாட்டி கிரேஸி படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர மலையாளத்தில் கேங்ஸ் ஆப் சுகுமார குருப் படத்திலும், தமிழில் சீரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com