“பரம் சுந்தரி” திரைப்படம் வெற்றி பெற நடிகை ஜான்வி கபூர் திருப்பதியில் சாமி தரிசனம்


“பரம் சுந்தரி” திரைப்படம் வெற்றி பெற நடிகை ஜான்வி கபூர் திருப்பதியில் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 14 Aug 2025 7:32 PM IST (Updated: 14 Aug 2025 7:36 PM IST)
t-max-icont-min-icon

நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ள “பரம் சுந்தரி” திரைப்படம் வருகிற 29-ம் தேதி வெளியாக உள்ளது.

மேடாக் பிலிம்ஸ் தினேஷ் விஜன் தயாரித்துள்ள ரொமான்ஸ் படமான பரம் சுந்தரியில் ஜான்வி கபூர் மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் நடித்துள்ளனர். தஸ்வி புகழ் துஷார் ஜலேதா இந்த படத்தை இயக்கியுள்ளார். மல்ஹோத்ரா பரம் கேரக்டரிலும், ஜான்வி கபூர் சுந்தரி கேரக்டரிலும் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் 29ம் தேதி வெளியாகிறது.

படத்தின் பர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன் வெளியான நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் வட இந்திய இளைஞனாக சித்தார்த் மல்ஹோத்ராவும் தென்னிந்திய பெண்ணாக ஜான்வி கபூர் காதலிக்கின்றனர். இவர்களது காதல் மற்றும் குடும்பங்களிடையே பிரச்சனை ஏற்படுகிறது . இதுப்போன்ற காட்சிகள் டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது. இதில் ஜான்வி கபூர் மலையாளத்திற்கு மோகன்லால், தமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் என்று கூறும் வசனம் கவனத்தை ஈர்த்துள்ளது.

இப்படம் சிரிப்பு, காதல், பிரச்சனை மற்றும் எதிர்ப்பார்க்காத டிவிஸ்டுகளுடன் திரைக்கதை அமைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 'தேவரா' திரைப்படத்தில் ரசிகர்களை கவர்ந்திருந்த ஜான்வி கபூர் தற்பொழுது மீண்டும் தென்னிந்திய பெண்ணாக நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் திரைப்படம் வெற்றி பெற வேண்டி திருப்பதியில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ஜான்வி கபூர் சாமி தரிசனம் செய்தனர். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story