நடிகை ஜோதிகாவின் பிறந்தநாள்: திருமண நாள் கொண்டாட்ட வீடியோ பகிர்ந்த சூர்யா

சூர்யா - ஜோதிகா தம்பதி தங்களது திருமண வாழ்க்கையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர்.
நடிகை  ஜோதிகாவின் பிறந்தநாள்: திருமண நாள் கொண்டாட்ட வீடியோ பகிர்ந்த சூர்யா
Published on: 

நடிகை ஜோதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் சூர்யா தங்களின் பிரம்மாண்டமான 20-வது திருமண நாள் கொண்டாட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் முக்கியமானவர்கள் சூர்யா - ஜோதிகா. 'பூவெல்லாம் கேட்டுப்பார்' படத்தில் முதன்முதலாக ஜோடி சேர்ந்த சூர்யா - ஜோதிகா, அதன் பிறகு 'பேரழகன்', 'காக்க காக்க', 'மாயாவி' உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். 2006-ம் ஆண்டு 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் இணைந்து நடித்த அவர்கள், அப்படம் வெளியான 3-வது நாளில் செப்டம்பர் 11-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர்.

20 ஆண்டுகள் நிறைவு

பல தம்பதிகளின் ஆதர்ச ஜோடிகளாக இருக்கும் சூர்யா - ஜோதிகாவுக்கு, தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். திரைத்துறையினரின் திருமணம் என்றாலே நீண்ட காலம் நிலைக்காது என்ற பார்வையே நீடித்துவரும் சூழலில், சூர்யா - ஜோதிகா தங்களது திருமண வாழ்க்கையில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர்.

மீண்டும் திருமணம்

இந்த தம்பதி கடந்த செப்டம்பர் 11-ம் தேதி தங்களது 20-வது திருமண நாளைக் கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக இருவரும் மகள், மகன் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். வெளிநாட்டில் நடைபெற்ற இந்த திருமணத்தில் நடிகர் கார்த்தி உள்ளிட்ட நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.

ஜோதிகாவிற்கு பிறந்தநாள் தெரிவித்த சூர்யா

நடிகை ஜோதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் சூர்யா தங்களின் பிரம்மாண்டமான 20-வது திருமண நாள் கொண்டாட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com