என்னை கர்வம் பிடித்தவள் என்பதா? -கரீனா கபூர்

பிரபல இந்தி நடிகை கரீனா கபூர், நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்த பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். சம்பளமும் அதிகம் வாங்குகிறார். 2 வயது மகனை பிரிந்து சினிமாவிலேயே கதியாக கிடப்பதாக அவர் மீது விமர்சனங்கள் வருகின்றன.
என்னை கர்வம் பிடித்தவள் என்பதா? -கரீனா கபூர்
Published on

மகனை கவனித்துக்கொள்ள ஒரு லட்சத்துக்கு மேல் சம்பளம் கொடுத்து ஆயாவை நியமித்து இருக்கிறார். கர்வமாக நடந்து கொள்கிறார். என்றும் வலைத்தளங்களில் விமர்சிக்கிப்படுகிறது. டி.வி நிகழ்ச்சியொன்றில் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது அவர் அளித்த பதில் வருமாறு:-

எனது குழந்தையை பார்த்துக்கொள்ள நான் ஆயா வைத்து இருப்பதை விமர்சிக்கின்றனர். குழந்தை பாதுகாப்புக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம். தாய்மாதிரி குழந்தையை அந்த ஆயா கவனித்துக் கொள்கிறார். அதற்கு விலை மதிப்பே இல்லை. எனக்கு கர்வம் அதிகம் என்றும் பேசுகிறார்கள்.

நான் எங்கேயாவது கர்வமாக நடந்து கொண்டேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நடிகைகளுக்கு ஒரு இமேஜ் இருக்கும். மேலும் நான் சினிமா குடும்பத்தில் இருந்து வந்து இருக்கிறேன். அதனால் என்னை கர்வம் பிடித்தவள் என்று நினைக்கிறார்களோ என்று தெரியவில்லை. அதெல்லாம் பிரமைதான், என்னை பற்றி எதுவும் தெரியாதவர்கள் பரப்பும் வதந்தி இது. இவ்வாறு கரீனா கபூர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com