நடிகை கரீனா கபூர் மீண்டும் கர்ப்பம்

நடிகை கரீனா கபூர் மீண்டும் கர்ப்பமாகி இருக்கிறார்.
நடிகை கரீனா கபூர் மீண்டும் கர்ப்பம்
Published on

பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான் 1991-ல் நடிகை அம்ரிதா சிங்கை மணந்து 2004-ல் விவாகரத்து செய்தார். இவர்களின் மகள் சாரா அலிகான் திரைப்படங்களில் நடிக்கிறார்.

இந்த நிலையில் 2012-ல் இந்தி நடிகையும், நடிகர் ரந்தீர் கபூரின் மகளுமான கரீனா கபூரை சயீப் அலிகான் காதலித்து 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தைமூர் என்ற ஆண் குழந்தை உள்ளது. கரீனா கபூருக்கு தற்போது 40 வயது ஆகிறது. இந்த நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமாகி இருக்கிறார். இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் குடும்பத்தில் இன்னொரு நபரை எதிர்பார்க்கிறோம். இதனை வெளிப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளனர்.

கரீனா கபூர் தற்போது அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கர்ப்பமாக இருக்கும் அவருக்கு ரசிகர்கள் வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com