காவிரியில் தண்ணீர் தராத கர்நாடகாவுக்கு தமிழகத்தில் இருந்து மின்சாரம், உணவு பொருட்களை அனுப்பக்கூடாது - நடிகை கஸ்தூரி

காவிரி நீர் கொடுக்காத கர்நாடகா மாநிலத்துக்கு வழங்கி வரும் மின்சாரம், வணிகத்துக்காக அனுப்படும் உணவுப் பொருட்களை நிறுத்த வேண்டும் என்று நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.
காவிரியில் தண்ணீர் தராத கர்நாடகாவுக்கு தமிழகத்தில் இருந்து மின்சாரம், உணவு பொருட்களை அனுப்பக்கூடாது - நடிகை கஸ்தூரி
Published on

தஞ்சை மாவட்டம் கும்பகோணம், சுவாமிமலை பகுதியில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்த நடிகை கஸ்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரி பிரச்சினையில் ஆளும் கட்சியினர் குரல் கொடுப்பதற்கும் மற்ற கட்சியினர் குரல் கொடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. காவிரியில் நமக்கு தேவையான தண்ணீரை திறந்து விட வேண்டும். இன்று(புதன்கிழமை) தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் நடக்கக்கூடிய வேலை நிறுத்தத்தை கர்நாடக எல்லையில் நடத்த வேண்டும். நாம் ஏன் நம்முடைய வருமானத்தை கெடுக்க வேண்டும். அவர்களுடைய(கர்நாடகாவின்) வருமானத்தை கெடுக்கலாம். காவிரியில் தண்ணீர் தராத கர்நாடகாவுக்கு தமிழகத்தில் இருந்து மின்சாரம், உணவு பொருட்களை அனுப்ப கூடாது.

சினிமாவில் மதம் மற்றும் சாதி ரீதியான பிளவுகள் நிறைய வந்து விட்டது. சாதி ரீதியிலான படம் எடுத்து அதை முற்போக்குத்துவம் என்று கூறுவதை நான் மறுக்கிறேன். தமிழ் சினிமாவில் கொச்சை வார்த்தைகள் இடம்பெறுவது முதல் முறை கிடையாது. லியோ படத்தில் விஜய் அதுபோன்ற வசனம் பேசி இருக்கக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com