

கடந்த 2021ம் ஆண்டு வெளியான 'முகில் பேட்டை' என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் காயடு லோஹர். அதனை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்தார். ஆனால் அவற்றில் எந்த படமும் எதிர்பார்த்த அளவில் வெற்றியடைவில்லை. இதற்கிடையில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக 'டிராகன்' படத்தில் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமானார். அந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நாயகியாக மாறிப்போன கயாடு லோஹர். தற்போது நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக 'இதயம் முரளி' படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் ஜீ.வி. பிரகாசுடன் 'இம்மார்டல்' என்ற படத்திலும், சிம்பு நடிக்கும் எஸ்.டி.ஆர் 49 என்ற படத்திலும் கயாடு லோஹர் இணைந்துள்ளார். அடுத்ததாக லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் இயக்கும் படத்தில் தனுசுடன் கயாடு லோஹர் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கயாடு லோஹர், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், டிராகன் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், படப்பிடிப்பின்போது எடுத்த படப்பிடிப்பு புகைப்படங்களை நடிகை கயாடு லோஹர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.. அதில் “டிராகன் படம் வெளியாகி 1 ஆண்டு ஆகிறது. இங்கு தான் என் பயணம் தொடங்கியது. உங்கள் இதயத்தில் எனக்கு ஒரு இடத்தைக் கொடுத்ததற்கும், என்னை மிகவும் அன்பாக வரவேற்றதற்கும் நன்றி. பல்லவி எப்போதும் சிறப்பு வாய்ந்தவள்” என்று பதிவிட்டுள்ளார்.