

இதுவரை 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த, செல்வராகவனுடன் சாணிகாகிதம் படங்களில் நடித்து முடித்து உள்ளார். அண்ணாத்த படத்தில் ரஜினியின் தங்கையாக அவர் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வருகிறது.
தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு ஜோடியாக சர்காரி வாரி பாட்டா படத்தில் நடிக்கிறார்.இன்னொரு தெலுங்கு படமும், மலையாள படமும் கைவசம் உள்ளது. இந்த நிலையில் தசரா என்ற தெலுங்கு படத்தில் நானி ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேசை அணுகினர். அந்த படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் அதிக சம்பளம் கேட்டதாகவும், இறுதியில் ரூ.3 கோடிக்கு உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய படங்களில் கீர்த்தி சுரேஷ் ரூ.2 கோடியில் இருந்து ரூ.2.5 கோடி வரை வாங்கியதாக கூறப்படுகிறது.